சினிமா

மலைக்க வைக்கும் ’பிகில்’ வசூல்: 3வது வார நிலவரம் இவ்வளவா? - ட்வீட் போட்ட சிங்கப்பெண்!

பிகில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து அந்த படத்தில் நடித்த வர்ஷா பொல்லம்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மலைக்க வைக்கும் ’பிகில்’ வசூல்: 3வது வார நிலவரம் இவ்வளவா? - ட்வீட் போட்ட சிங்கப்பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சலுக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் பிகில். 3 வாரங்கள் ஆகியும் நாள்தோறும் படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

மேலும், படத்தின் வசூல் குறித்த சர்ச்சைகளும் வந்துக்கொண்டிருக்கிறது. இரண்டு வார முடிவில் உலகளவில் 200 கோடிக்கு மேல் பிகில் படம் வசூல் சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது 3வது வாரம் முடிவடைந்த நிலையில், பிகில் படத்தின் வசூல் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக படத்தில் வரும் சிங்கப்பெண்களில் ஒருவரான வர்ஷா பொல்லம்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது விஜய் ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக இருந்தாலும், விநியோகஸ்தர்கள் நெருக்கடியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. முன்னதாக பேசியுள்ள பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஈட்டக்கூடிய நடிகர்கள் வெறும் கமர்சியல் நோக்கத்திற்காக படம் எடுக்காமல் குடும்ப ரசிகர்களுக்காகவும் படத்தில் நடிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும், படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு வசூல் குறித்த தகவல்கள் திருப்திகரமாக இருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு சற்று பின்னடைவையே கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃப்ஸில் ஸ்டார் என்ற இடத்தை இன்றளவும் நடிகர் விஜய் தக்கவைத்து வருகிறார் என்பது சினிமா வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories