சினிமா

டிஸ்னி+ ஸ்ட்ரீமிங், Phase 4 பட வரிசை என ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்திய மார்வெல்!

மார்வெலின் Phase 4ல் வரும் படங்களை பட்டியலிட்டுள்ளது மார்வெல் நிறுவனம்.

டிஸ்னி+ ஸ்ட்ரீமிங், Phase 4 பட வரிசை என ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்திய மார்வெல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்துக்கு பிறகு, அடுத்தடுத்த மார்வெல் படங்களுக்காக மார்வெல் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் அடுத்த 8 ஆண்டுகளுக்கான ஷெட்யூல்ல இப்போதே ‘Phase 4’, ‘Phase 5’ என்ற பெயரில் அறிவித்துள்ளது.

அதில், Phase 4க்கான அப்டேட் தொடர்பாக அண்மையில் நடந்த மார்வெல் காமிகானில அறிவிக்கப்பட்டிருந்தது. கூடவே டிஸ்னி+ என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் இந்த டிஸ்னி+ செயலி நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப் மூலம் மார்வெல் ரிலீஸ் செய்யவிருக்கும் படங்களையும் சீரிஸ்களையும் மிஸ் பண்ணாமல் ஃபாலோ செய்துவந்தால்தான், மார்வெலின் அடுத்தடுத்த படங்களோடு ரசிகர்களால் இணைந்திருக்க முடியும் என மார்வெல் நிறுவனத்தின் தலைமை கெவின் ஃபெய்க் கூறியிருக்கார்.

டிஸ்னி+ ஸ்ட்ரீமிங், Phase 4 பட வரிசை என ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்திய மார்வெல்!

மார்வெலின் phase 4ல் “Black Widow, The Eternals, Shang-Chi and the Legend of the Ten Rings, Doctor Strange in the Multiverse of Madness, Thor: Love and Thunder மற்றும் ஒரு ஸ்பைடர் மேன்” படமும் வரிசையில் உள்ளது. இதற்கிடையில் இந்த டிஸ்னி+ ஸ்ட்ரீமிங்கில் “Ms. Marvel, She-Hulk, Moon Knight, The Falcon and the Winter Soldier, WandaVision, Loki, What If..., Hawkeye ஆகிய சூப்பர் ஹீரோ கதைகள் படமாவும் சீரிஸாவும் வெளியாகவுள்ளது.

இந்த அறிவிப்பு மார்வெல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றே கூறலாம். மேலும், இதுவரை மார்வெல் படங்களை சரிவர பார்த்திராதவர்களுக்கு இந்த டிஸ்னி+ உபயோகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories