சினிமா

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட்டுக்கு கோடம்பாக்கம் எப்படியோ அப்படி ஹாலிவுட்டுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ். சினிமா என்ற ஒற்றை மந்திரம் மட்டுமே இந்த நீண்ட தூரத்தை எளிதில் கடக்க வைக்கிறது. சினிமா நம்மை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் பல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது, பல வரலாற்று நிகழ்வுகளை அறியவைக்கிறது. புதைந்துப் போன, நீரில் மூழ்க்கிபோன நிகழ்வுகளை கூட ஆராய்ந்து காட்டியிருக்கிறது. அப்படியாக நாம் அறிந்த ஒரு நிகழ்வுதான் பிரம்மாண்ட கப்பலான டைட்டானிக் கடலில் மூழ்கியது.

‘ஜேம்ஸ் கேமரூன்’ இயக்கத்தில் வெளியான இந்த பிரம்மாண்ட படைப்பில் ஜாக்காக வந்து உலக மக்களின் மனதில் நின்றவர் ‘லியோனார்டோ டிகாப்ரியோ’. மூழ்கிய டைட்டானிக்கின் மூலம் ரசிகர்களின் அன்பென்னும் முத்தை அள்ளிய இவருக்கு இன்று 45வது பிறந்த நாள்.

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

தனது 15வது வயதில், 1989ல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த டிகாப்ரியோ, ஹாலிவுட் இண்டஸ்ட்ரிக்குள் எண்ட்ரியானது 1991ல். க்ரிஸ்டியன் பீட்டர்சன் இயக்கத்தில் வெளியான ‘Critters 3' படம் இவர் நடித்து வெளியான முதல் ஹாலிவுட் படம். த்ரில்லர் படமான இது இதற்கு முன்னா் வெளியாகி வெற்றிபெற்ற ‘Critters’ படத்தின் சீக்குவலில் மூன்றாவது பாகமாக வெளியாகி வெற்றிப் பெற்றது. ஆனால் இதில் டிகாப்ரியோவுக்கு முன்னணி கதாப்பாத்திரம் கிடையாது. பின்னர் 1993ல் வெளியான ‘This Boy's Life’ படம் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை தேடிக் கொடுத்தது.

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

Michael Caton-Jones இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் டிகாப்ரியோ இதில் இரண்டாம் கட்ட நாயகனாகதான் இருந்தார். இப்படி ஒரு சில ஆண்டுகள் கூட்டத்தில் ஒருத்தனாகவும், இரண்டாம் கட்ட நாயகனாகவும் நடித்துவந்தவர் Scott Kalvert இயக்கத்தில் 1995ல் வெளியான ‘The Basketball Diaries’ படத்தில் தான் ஹீரோவாக தனது முதல் எண்ட்ரியை கொடுத்திருந்தார். ஜிம் கேரோல் எனும் நாவலாசிரியரின் பயோகிராஃபி படமான இதில் டிகாப்ரியோ மியூசிஷியன், நாவலிஸ்ட், கூடைப்பந்து ப்ளேயர் என மூன்று திறமைகள் கொண்ட இளைஞனாக வந்து அசத்தியிருந்தார்.

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

தனது பதினெட்டாவது வயதிலேயே ‘What's Eating Gilbert Grape' எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இவருக்கு இது ஒன்றும் கடினமான ஒன்றாக இருந்துவிடப் போவதில்லை, தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி அனைவரையும் கவர்ந்திருந்தார். அதன் பின் வெளியான படங்களில் காதல் மன்னனாக, கனவு நாயகனாக காட்சிபடுத்தப்பட்ட டிகாப்ரியோவின் திரைப்பயணத்தையே மாற்றிப்போட்டது ஜேம்ஸ் கேமரூனின் ‘டைட்டானிக்’.

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

இந்த படத்தில் கேட் வின்சல்ட் ஜோடியாக ஜாக் எனும் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார். 1997ல் செய்த வசூல் சாதனை, இந்த படத்தை உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியளில் முதலிடத்தை பிடிக்க செய்தது. இந்த சாதனை பின்னர் மீண்டும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தினால் 2009ல் தான் முறியடிக்கப்பட்டது. சொல்லப்போனால் ஹாலிவுட்டின் பிரம்மாண்டங்களும் 1000, 2000 கோடி வசூல்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டதே இந்த டைட்டானிக்தான்.

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

டைட்டானிக் டிகாப்ரியோவை புகழின் உச்சிக்கு கொண்டு நிறுத்தியது. அதன் பின் தான் தேர்வு செய்யும் ஒவ்வொரு கதைகளிளும் அதிக கவனம் செலுத்தினார். இவர் வந்தாலே படம் ஹிட் தான் எனும் நிலைக்கு ஹாலிவுட் சினிமா பழகிக்கொண்டது. இதை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களான டேனி பாயல், ஸ்டீவன் ஸ்பீல்பர்க், மார்டின் ஸ்கார்செஸ், கிறிஸ்டோஃபர் நோலன் ஆகியோர்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். மற்ற முக்கிய இயக்குநர்களுக்கு ஒரு படம் மட்டுமே நடித்த டிகாப்ரியோ மார்டின் ஸ்கார்செஸ்க்கு மட்டும் ஆறு படங்கள் நடித்தார். அவரிடம் அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாளும் தனக்கு பிடித்த இயக்குநராக அவர் சொல்வது மார்டினை தான். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘Gangs of New York', ‘The Aviator’, ‘The Departed’, ‘Shutter Island’, ‘The Wolf of Wall Street’, ‘The Audition’ ஆகிய அனைத்துமே சூப்பர் ஹிட் ரகம் தான். மார்டின் எப்போதும் டிகாப்ரியோவை ஏமாற்றியதில்லை அதனாலெயே இவரோடு சேர்ந்து பணியாற்றுவதை அதிகம் விரும்புகிறார் போல,

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

1994ல் துவங்கி ஆஸ்கார் விருதுக்காக போராடியவருக்கு 2005ல் தி அவியேடர், 2007ல் ப்ளட் டைமண்ட், 2014ல் தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் ஆகிய படங்கள் விருது விழா வரை அழைத்துச் சென்றது. ஆனால் மேடை ஏறி விருதை பெறவிடவில்லை. அந்த ஏமாற்றங்கள் 2016ல் ‘தி ரெவெனண்ட்’ படம் மூலமாக முடிவுக்கு வந்தது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது இந்த படத்தில் அவருக்கு கிடைத்தது. இந்த போராட்டங்கள் எல்லாம் இவருக்கு ஆஸ்கார் விருதை பெற மட்டுமே, ஆனால் ஆஸ்கார் அல்லாமல் டிகாப்ரியோ பெற்ற விருதுகளையும் அவருக்கான பரிந்துரைகளை பட்டியலிட்டால் அதில் வென்ற விருதுகள் 54ம், பரிந்துரைகளில் 167 விருதுகளும் சேர்கிறது.

டைட்டானிக்கில் மூழ்கி முத்தெடுத்த டிகாப்ரியோ பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

மேலும் இவருக்கான சிறப்புகளில் உலகின் ஐம்பது அழகிய ஆண்களின் பட்டியலில் people பத்திரிகை இவரை சேர்த்ததும், தவிர்க்க முடியாத சினிமா உலக பிரபலங்களில் நூறு பேரை தேர்வு செய்த எம்பயர் பத்திரிக்கை இவரை 75 வது நபராக்கியதும் தான் நமக்கு முதலில் நினைவிற்கு வருகிறது. தனிப்பட்ட வாழ்கையில் இவருக்கு ஒரு சில காதல் பயணங்கள் உண்டு ஆனால் பொது வாழ்கையில் இவரின் காதல் சினிமாவின் மீது மட்டுமே என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

banner

Related Stories

Related Stories