சினிமா

மீண்டும் ஒரு காமெடி நடிகருடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா; ’ ‘மூக்குத்தி அம்மன்’ போஸ்டர் ரிலீசானது!

ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் போஸ்டர் வெளியானது.

 மீண்டும் ஒரு காமெடி நடிகருடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா; ’ ‘மூக்குத்தி அம்மன்’ போஸ்டர் ரிலீசானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. ஹீரோயின் சென்ட்ரிக் ரீதியான படங்களில் நடித்து வரும் நயன்தாரா அண்மையில் வெளியான பிகில், விஸ்வாசம் படங்களும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், காமெடி நடிகராக சினிமாவுக்குள் வந்து எல்.கே.ஜி. படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கும் ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் நயன்தாரா. இந்த படத்துக்கு மூக்குத்தி அம்மன் என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான், வேலைக்காரன் படங்களில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடித்திருந்தார்.

ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தை என்.ஜே. சரவணன் இயக்குகிறார். அடுத்த ஆண்டு சம்மருக்கு படம் வெளிவர இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த படத்துக்கு ஆர்.ஜே.பாலாஜியே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். முன்னதாக இவர் நடிப்பில் வெளிவந்த அரசியல் satire படமான எல்.கே.ஜிக்கும் ஆர்.ஜே.பாலாஜிதான் கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

banner

Related Stories

Related Stories