தமிழ்நாடு

ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் : த.வெ.க எம்.எல்.ஏ மீது புகார் கொடுத்த கள்ளக்கறிச்சி மாவட்ட ஆட்சியர்!

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தகாத முறையில் நடந்து கொண்டதாக த.வெ.க எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது எஸ்.பி., அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்துள்ளார்.

ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் : த.வெ.க எம்.எல்.ஏ மீது புகார் கொடுத்த கள்ளக்கறிச்சி மாவட்ட ஆட்சியர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க., சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், இரவில் ஆட்சியர் வீட்டுக்கே நேரில் சென்று தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் முதலமைச்சர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவெக எம்.எல்.ஏ.,வை தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்.

இதேபோல் அமைச்சர்களும் த.வெ.க எம்.எல்.ஏ.,வுக்கு முட்டு கொடுத்து வருகின்றனர். ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்றும், எனவே நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் மனசாட்சி இல்லாமல் தெரிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட ஆட்சியரின் நிலைப்பாட்டை கேட்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தவெக எம்எல்ஏ மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரே நேரடி புகார் மனு அளித்துள்ளார். அதில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

எனவே த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆட்சியரே புகார் அளித்துள்ளதால், இதற்கு தவெக அமைச்சர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories