சினிமா

சல்மான் கானுக்கு வில்லனாகிறாரா நடிகர் பரத்? : ‘ராதே’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் நடிப்பில் உருவாகும் ‘ராதே’ படத்தில் நடிக்கிறார் பரத்.

சல்மான் கானுக்கு வில்லனாகிறாரா நடிகர் பரத்? : ‘ராதே’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பரத், அதன்பிறகு 4 ஸ்டூடன்ட்ஸ், எம்.மகன், பட்டியல், வெயில், பழனி என பல படங்களில் நடித்திருந்தாலும் சில மட்டுமே அவருக்கு வெற்றியைத் தந்துள்ளது.

நடனத்தில் மிகுந்த ஆர்வமிக்கவர் என்பதால் அதில் கவனம் செலுத்திய நடிகர் பரத் அவ்வப்போது படங்களில் நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். திருமணமான பிறகு சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து மீண்டும் பொட்டு, சிம்பா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சல்மான் கானுக்கு வில்லனாகிறாரா நடிகர் பரத்? : ‘ராதே’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தற்போது காளிதாஸ் என்ற தமிழ் படத்திலும் 6 ஹவர்ஸ் என்ற மலையாள படத்திலும் பரத் நடித்து வருகிறார். இதற்கிடையில், இந்தி படம் ஒன்றிலும் பரத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தானே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பரத். அதில், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் நடிப்பில் உருவாகும் ‘ராதே’ படத்தில் தானும் நடிப்பதாக பரத் குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் கானுடன் நடிக்கும் நீண்ட நாள் கனவு நனவாகியிருப்பதாக பதிவிட்டு சல்மான் மற்றும் பிரபுதேவாவுடன் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

2020 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள சல்மான்கானின் ராதே படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories