சினிமா

ஓராண்டை நிறைவு செய்த சர்கார்; சட்டப்பிரிவு 49P-ஐ நினைவுக்கூர்ந்த இயக்குநர்!

விஜயின் சர்கார் படம் வெளியாகி ஓராண்டு ஆனதை அடுத்து வீடியோ வெளியிட்டு சிறப்பித்துள்ளது படக்குழு. 

ஓராண்டை நிறைவு செய்த சர்கார்; சட்டப்பிரிவு 49P-ஐ நினைவுக்கூர்ந்த இயக்குநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துப்பாக்கி, கத்தி படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் மூன்றாவது முறையாக வெளியான படம் சர்கார். 2018ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம் வழக்கம் போல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டும் அடித்திருந்தது.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

கள்ள ஓட்டு போடுவதை எதிர்த்து 49P என்ற சட்டப்பிரிவை முன்வைத்து ஒருவர் தன் வாக்கை பதிவு செய்துக்கொள்ளலாம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் விஜயின் சர்கார்.

ஓராண்டை நிறைவு செய்த சர்கார்; சட்டப்பிரிவு 49P-ஐ நினைவுக்கூர்ந்த இயக்குநர்!

சர்கார் படத்துக்கு பிறகு வாக்களிப்பதின் உரிமை குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது சர்கார்.

இந்நிலையில், படம் வெளியாகி ஓராண்டு ஆனதை அடுத்து ட்விட்டரில் #OneYearOfBBSarkar என்ற ஹேஷ்டேக்கில் சட்டப்பிரிவு 49P குறித்த சர்கார் பட போஸ்டரை பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும், சர்கார் படம் வெளியாகி ஓராண்டை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

banner

Related Stories

Related Stories