சினிமா

டெல்லி மாசுப்பாட்டுக்கு இடையே விஜய் 64 ஷூட்டிங்கில் இணைந்த நாயகி!

விஜய் 64 படத்தின் படபிடிப்பில் இணைந்தது தொடர்பாக நாயகி மாளவிகா மோகனன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி மாசுப்பாட்டுக்கு இடையே விஜய் 64 ஷூட்டிங்கில் இணைந்த நாயகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இதில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அங்கமாலி டைரீஸ் “ஆண்டனி வர்கீஸ்” உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

எக்ஸ்.பி. கிரியேட்டர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என படக்குழு ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தது.

கடந்த அக்., மாதம் பூஜையுடன் தொடங்கிய படத்தின் ஷூட்டிங் வேலைகள் சென்னையில் ஒரு பாதி முடிந்துள்ளது.

டெல்லி மாசுப்பாட்டுக்கு இடையே விஜய் 64 ஷூட்டிங்கில் இணைந்த நாயகி!

மீதி படபிடிப்பு டெல்லியில் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக விஜய் 64 ஷூட்டிங் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டது.

இதனால் விஜய் சம்மந்தபட்ட காட்சிகள் மட்டும் கிடைக்கும் சமயத்தில் படமாக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் இன்று முதல் விஜய் 64ன் இரண்டாம் கட்ட படபிடிப்பில் இணைந்துள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த மாத இறுதியில் விஜய் சேதுபதி படபிடிப்பில் கலந்துக்கொள்வார் என்றும், வருகிற ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories