சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் கமல்ஹாசன்: தர்பார் புது அப்டேட்!

தர்பார் பட மோஷன் போஸ்டர் குறித்து இயக்குநர் முருகதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் கமல்ஹாசன்: தர்பார் புது அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி முதல் முறையாக நடித்திருக்கும் படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகிக்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ளார். யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளது என லைகா புரொடக்‌ஷன்ஸ் முன்பே அறிவித்திருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் கமல்ஹாசன்: தர்பார் புது அப்டேட்!

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவடந்ததை அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் நவம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் என கடந்த மாதம் இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்தார்.

அதனையடுத்து, ரஜினி ரசிகர்கள் தர்பார் பட மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

அதில், தர்பார் பட மோஷன் போஸ்டரை தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் கமல்ஹாசனும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், இந்தியில் நடிகர் சல்மான் கானும் நாளை (நவ.,7) மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர் என அறிவித்துள்ளார்.

இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் #darbarmotionposter என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories