சினிமா

மீண்டும் காமெடியில் கலக்க வருகிறது மார்வெல்லின் Thor!

Thor: Love and thunder படத்தில் thorக்கு நிகரான பெண் கதாபாத்திரத்தை அமைத்துள்ளது மார்வெல்.

மீண்டும் காமெடியில் கலக்க வருகிறது மார்வெல்லின் Thor!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காமிக்கான் படங்களில் மார்வெல் ஸ்டுடியோ அறிவித்த படங்களின் பட்டியலில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் "Thor: Love and Thunder". Phase Four-ன் கடைசி படமாக வெளியாக இருக்கும் இந்த படம் அவெஞ்சர்ஸ் படங்களின் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் Thor உடன் இணைந்து பிரபல ஹாலிவுட் ஹீரோயின் நடாலி போர்ட்மேன் நடிக்க இருக்கிறார். நடாலிக்கு இந்த படத்தில் Thor-க்கு நிகரான பவர் ஒன்றை கொடுக்கவும் மார்வெல் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் காமெடியில் கலக்க வருகிறது மார்வெல்லின் Thor!

Thor-ன் கதாபாத்திரம் ஆக்கிரோஷமாகவும், கோபக்காரனாகவும், தலைகனம் உள்ளவனாகவும் காண்பித்த மார்வெல், Thor Rangnarok படத்தில் Thor-இடமிருந்து அனைத்து சக்திகளையும் எடுத்து ஒரு சாதாரண மனிதனாக காட்சிப்படுத்தி இருந்தது.

அதில் நிறைய காமெடி காட்சிகளையும் பொறுத்தியிருந்தது ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தும் போனது. அதே டெக்னிக்கைதான் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திலும் Thorக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

மீண்டும் காமெடியில் கலக்க வருகிறது மார்வெல்லின் Thor!

இதனையடுத்து, Thor: love and Thunder படத்திலும் கொஞ்சம் ஆக்‌ஷனுடன் காமெடிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

இந்த படத்தை Taika Waititi இயக்கவிருப்பதால் நிச்சயம் ஒவ்வொரு காட்சிகளிலும் காமெடி கலந்திருக்கும் என நம்பலாம். ஆனாலும் Thor-ன் கோபத்தையும், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளையும் மிஸ் செய்யும் மார்வெல் ரசிகர்களுக்காக படத்தில் இரண்டு பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories