சினிமா

இந்தியில் ரீமேக்காகிறதா விஜய் படம்? - அட்லீ-ஷாருக் கூட்டணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

அட்லீ, ஷாருக்கான் கூட்டணி உருவானதன் சுவாரஸ்ய தகவல்கள்.

இந்தியில் ரீமேக்காகிறதா விஜய் படம்? - அட்லீ-ஷாருக் கூட்டணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய்யுடனான அட்லீயின் ‘பிகில்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி இதுவரை உலகளவில் 200 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்தக் கூட்டணி உறுதியானதாகவும், ஷங்கி என அந்த படத்துக்கு பெயரிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தியில் ரீமேக்காகிறதா விஜய் படம்? - அட்லீ-ஷாருக் கூட்டணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

இந்த நிலையில், மெர்சல் படம் வெளியான சமயத்தில் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஷாருக்கான் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன் பிறகு பிகில் பட வேலைகளில் அட்லி பிஸி ஆனதால் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அதில், மெர்சல் அல்லது பிகில் படத்தை ரீமேக் பண்ணலாம் என ஷாருக் ஐடியா கொடுக்க, அதற்கு அட்லீ, ரீமேக் வேண்டாம் நேரடி கதையே பண்ணலாம் என ஒன்லைன் ஒன்றைச் சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார்.

இந்தியில் ரீமேக்காகிறதா விஜய் படம்? - அட்லீ-ஷாருக் கூட்டணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

தற்போது பிகில் படமும் ரிலீஸானதால் ஷாருக்கானுடனான படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் படத்தின் தலைப்பு மற்றும் படப்பிடிப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படமெடுக்க இருப்பதாகவும் இயக்குநர் அட்லீ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories