சினிமா

விஜய் 64 : Youtube சேனல் புகழ் நடிகை ஒப்பந்தம்... கேங்க்ஸ்டர் ஆக நடிக்கும் விஜய் ? - புதிய தகவல்கள் !

நடிகர் விஜயின் 64வது படம் குறித்த புது அப்டேட்கள் வெளியானது.

விஜய் 64 : Youtube சேனல் புகழ் நடிகை ஒப்பந்தம்... கேங்க்ஸ்டர் ஆக நடிக்கும் விஜய் ? - புதிய தகவல்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜயின் 63வது படமாக அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் படம் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், தனது 64வது படத்துக்காக மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார் நடிகர் விஜய்.

இதில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அங்கமாலி டைரீஸ் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான XB கிரியேட்டர்ஸ் அறிவித்திருந்தது.

விஜய் 64 : Youtube சேனல் புகழ் நடிகை ஒப்பந்தம்... கேங்க்ஸ்டர் ஆக நடிக்கும் விஜய் ? - புதிய தகவல்கள் !

படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கி 22 நாட்கள் வரை நடந்து முடிந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங் டெல்லியில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

விஜய் 64 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தில் தற்போது கோலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வரும் நடிகர் ஆண்ட்ரியா இணைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கல்லூரிப் பேராசிரியை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. Youtube சேனல் புகழ் பிரிகிதா என்பவரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், விஜய் 64 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக இந்த படத்துக்கு அனிருத் இரண்டு பாடல்களும் கம்போஸ் செய்து முடித்திருப்பதாகவும் அந்த பாடல்களின் ஷூட்டிங்கே அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், இந்தப் படம் கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாகிறது என்கிற தகவலும் ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது. முன்னதாக, விஜய் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் ஆன போக்கிரி படம் கேங்க்ஸ்டர் வகையைச் சார்ந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories