சினிமா

ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த நடிகர் விஜய் - வைரல் வீடியோ : விஜய்64 கெட்டப் இதுவா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் ஷூட்டிங் முடிந்ததும் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகியுள்ளது.

ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த நடிகர் விஜய் - வைரல் வீடியோ : விஜய்64 கெட்டப் இதுவா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் 63வது படமாக உருவாகியுள்ள ‘பிகில்’ நாளை உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டாலும், விஜய் ரசிகர்களுக்கு நாளைதான் தீபாவளியாக அமையும் அளவுக்கு பிகில் படத்தின் மீது அளப்பரிய எதிர்பார்ப்பில் காத்த்திருக்கின்றனர்.

ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த நடிகர் விஜய் - வைரல் வீடியோ : விஜய்64 கெட்டப் இதுவா ?

இதற்கிடையே, லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தனது 64வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ‘அங்கமாலி டைரீஸ்’ ஆண்டனி வர்கீஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த நடிகர் விஜய் - வைரல் வீடியோ : விஜய்64 கெட்டப் இதுவா ?

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் விஜய் 64 படப்பிடிப்பில் நடிகர் விஜய் நடிப்பது போன்ற காட்சிகள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த நடிகர் விஜய் - வைரல் வீடியோ : விஜய்64 கெட்டப் இதுவா ?

அதுமட்டுமல்லாமல், பிகில் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் நேற்று படப்பிடிப்பு முடித்துவிட்டு ஷூட்டிங் தளத்தில் இருந்து வெளியே வரும்போது தனது ரசிகர்களை விஜய் சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த நடிகர் விஜய் - வைரல் வீடியோ : விஜய்64 கெட்டப் இதுவா ?

சென்னையில் விஜய் 64 படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் படக்குழு தற்போது டெல்லிக்கு சென்றுள்ளனர். பிகில் படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யை சந்தித்ததில் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories