சினிமா

‘கைதி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு - ‘பிகில்’ படத்தோடு நேரடி மோதலா?

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கைதி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு - ‘பிகில்’ படத்தோடு நேரடி மோதலா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கைதி. இதில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார்.

ஜெயிலில் கைதியாக உள்ள கார்த்திக்கும், போலிஸாருக்கும், வேறொரு கூட்டத்துக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளே ’கைதி’ படம். ஒரு இரவின் 4 மணிநேரத்திற்குள் நடக்கும் நிகழ்வே கைதி படத்தின் கதை. விறுவிறுப்புக்கு கொஞ்சமும் குறைவைக்காத வகையில் அமைந்துள்ளது படத்தின் ட்ரெய்லர்.

இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், நரேன், யோகிபாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதேசமயத்தில் நடிகர் விஜய்யின் பிகில் படமும் ரிலீஸாக உள்ளது.

‘கைதி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு - ‘பிகில்’ படத்தோடு நேரடி மோதலா?

ஆகையால் கடுமையான போட்டியும் எதிர்பார்ப்பும் கைதி படத்தின் மீது ரசிகர்களுக்கு உருவாகியிருக்கும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

தீபாவளி விருந்தாக கார்த்தியின் கைதி படம் வருகிற அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை இருக்கும் என்பதால் இந்த தேதியை தேர்ந்தெடுத்துள்ளது படக்குழு.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் #KaithiFromOct25 என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது.

banner

Related Stories

Related Stories