சினிமா

“புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம்; மஜா பண்றோம்” : Vikram58 குறித்து இர்ஃபான் பதான் அதிரடி அறிவிப்பு!

விக்ரமின் 58வது படத்தில் நடிப்பது உறுதியானதை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம்; மஜா பண்றோம்” : Vikram58 குறித்து இர்ஃபான் பதான் அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். விளம்பரங்களில் அநேகமாக பல வீரர்கள் நடித்திருந்தாலும் சடகோபன் ரமேஷ், ஸ்ரீசாந்த் போன்றோர் திரைப்படங்களிலும் கால்பதித்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 58வது படம் உருவாகி வருகிறது. இதில் இர்ஃபான் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

“புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம்; மஜா பண்றோம்” : Vikram58 குறித்து இர்ஃபான் பதான் அதிரடி அறிவிப்பு!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இர்ஃபான் பதான், “என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அஜய்ஞானமுத்துவுடன் சீயான்58 படத்தில் இணைவதில் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும். நன்றி. மஜா பண்றோம்.” என சென்னைத் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories