சினிமா

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ! - 3D தொழிற்நுட்பத்தில் தயாராகும் தமிழ் படம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தற்போது தமிழ் படத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ! - 3D தொழிற்நுட்பத்தில் தயாராகும் தமிழ் படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் ஹன்சிகாவின் அடுத்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. இதில், நயன்தாரா, த்ரிஷா, டாப்சி போன்ற நடிகைகள் முன்னணியில் உள்ளனர்.

அந்த வகையில் பல நாட்களாக தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அம்புலி, ஜம்புலிங்கம் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஹரி-ஹரீஷ் ஹன்சிகா நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளனர்.

காமெடி மற்றும் ஹாரர் வகையில் உருவாகவுள்ள இந்தப் படத்தை யோகிபாபு நடிப்பில் வெளியான தர்மபிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ! - 3D தொழிற்நுட்பத்தில் தயாராகும் தமிழ் படம்

இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், ஐ.பி.எல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஹன்சிகாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தி மற்றும் மலையாள படங்களில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தாலும், முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.

ஹரி ஹரீஷ் இரட்டை இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்கள் என்பதால் இந்தப் படத்தையும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories