சினிமா

தனுஷ் பற்றி என்ன சொன்னார் ஷாருக்கான்? #AskSRK

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக்கான் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

தனுஷ் பற்றி என்ன சொன்னார் ஷாருக்கான்? #AskSRK
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது தற்போது வழக்கமான நிகழ்வாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார்.

ட்விட்டரில் #AskSRK எனும் ஹேஷ்டேக் மூலம் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு ஷாருக்கான் பதிலளித்தார். அப்போது, ரசிகர்கள் சிலர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் ஆகியோர் பற்றி ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு கேட்டனர்.

அஜித் பற்றிப் பேசிய அவர், ‘என் நண்பர்’ எனப் பதிலளித்தார். விஜய் பற்றிக் கூறுமாறு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ‘அற்புதம்’ (Awesome) எனப் பதிலளித்தார் ஷாருக். தனுஷ் பற்றிக் கேட்டதற்கு, “எனக்கு அவரைப் பிடிக்கும்” எனப் பதிலளித்தார்.

மேலும் ரசிகர் ஒருவர், “எதிர்காலத்தில் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதா” எனக் கேட்டதற்கு, “நிச்சயமாக. தமிழ் மொழி குறித்த புரிதல் எனக்கு நன்றாகவே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தங்கள் கேள்விகளுக்கு ஷாருக்கான் அளித்த பதிலால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories