சினிமா

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற தீவிர ரசிகர்... கனவுகள் நிஜமானதாக நெகிழ்ச்சி ட்வீட்!

நடிகர் விஜய்யின் 64வது படத்தில் அவரது தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனு இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற தீவிர ரசிகர்... கனவுகள் நிஜமானதாக நெகிழ்ச்சி ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய்யின் 64வது படத்தை இயக்குகிறார் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் விஜய்யின் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நேற்று முக்கிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டது.

அதில், விஜய் 64 குறித்த அப்டேட்கள் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்ததை அடுத்து விஜய், விஜய் சேதுபதியைக் கொண்டாடி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றனர்.

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற தீவிர ரசிகர்... கனவுகள் நிஜமானதாக நெகிழ்ச்சி ட்வீட்!

இந்த நிலையில், விஜய் 64 படம் தொடர்பாக என்ன அறிவிப்பு வெளியிட இருக்கிறார்கள் என ஆவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, விஜய் 64 படத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்திருந்த ஆண்டனி வர்கீஸ் இணைந்திருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. தமிழில் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் முதல் படம் இதுதான்.

இவ்வாறு இருக்கையில் கடைசி நாளான இன்று வரும் அறிவிப்பிலாவது கதாநாயகி குறித்த தகவல் வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேறு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.

அதில், விஜய் 64 படத்தில் நடிகர் சாந்தனு நடிப்பதாக அவரே தனது ட்விட்டரில் பதிவிட்டு, “கனவுகள் நிஜமாகும்” எனத் தெரிவித்திருந்தார். ஏனெனில், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களுள் சாந்தனுவும் ஒருவர். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவும் கூட.

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு இன்னும் பூஸ்ட் ஏற்றியுள்ளது என்று கூறினாலும், ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளிவராதது, ஏமாற்றத்தை அளித்துள்ளதாக புலம்பி வருகின்றனர்.

முன்னதாக ‘விஜய் 64’ படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய்யும், கல்லூரி மாணவராக சாந்தனுவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அந்தத் தகவல் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories