சினிமா

விஜய்க்கு ஜோடியாகும் ‘பேட்ட’ நடிகை? - அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகம்! #Vijay64

விஜய் 64 படத்தின் அடுத்தடுத்த முக்கிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது எக்ஸ்பி தயாரிப்பு நிறுவனம்.

விஜய்க்கு ஜோடியாகும் ‘பேட்ட’ நடிகை? - அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகம்! #Vijay64
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய்யின் 63வது படமாக உருவாகியிருக்கிறது பிகில். 3வது முறையாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இந்தப் படம் வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வர இருக்கிறது.

பிகில் படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நடிகர் விஜய், குடும்பத்துடன் தீபாவளியை பிகில் பட ரிலீஸோடு கொண்டாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், விஜய் 64 படத்தில் முக்கிய அறிவிப்புகள் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும், இன்று மாலை 5 மணிக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி, அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், விஜய் சேதுபடி நடிப்பதை உறுதிப்படுத்தி புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை அடுத்து சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், தற்காலிகமாக விஜய் 64 என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், இதற்காக தனது துக்ளக் தர்பார் பட ஷூட்டிங்கை விஜய் சேதுபதி ஒத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

விஜய்க்கு ஜோடியாகும் ‘பேட்ட’ நடிகை? - அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகம்! #Vijay64

இதற்கிடையே, விஜய் 64 படத்தில் விஜய்க்கு நாயகியாக பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவி பூங்கொடியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டன. நாளை அல்லது நாளை மறுநாள் படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனனுக்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக வந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories