சினிமா

விஜய்யுடன் இணைந்த விஜய் சேதுபதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய் சேதுபதி, விஜய் 64 படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

விஜய்யுடன்  இணைந்த விஜய் சேதுபதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து, விஜய்யின் 64வது படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இந்த படத்துக்கான படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் 64 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்யுடன்  இணைந்த விஜய் சேதுபதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்!

இதற்கிடையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் தனது ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளாராம் விஜய் சேதுபதி.

இவ்வாறு இருக்கையில், விஜய் 64 படத்தின் முக்கிய அறிவிப்புகள் இன்று முதல் மாலை 5 மணிக்கு அடுத்த 3 நாட்களுக்கு வெளியிடப்படும் என எக்ஸ்பி தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி விஜய் 64 படத்தில் நடிப்பதாக சற்றுமுன்பு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இதனையடுத்து, அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் 64 படத்துக்கான படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

பிகில் படத்தின் பணிகளை முடித்துவிட்டு விஜய் வெளிநாடு சென்றுவிட்டார். விரைவில், சென்னை திரும்பும் அவர் தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறை நாட்களில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories