
அட்லீ, விஜய் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ளது ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, இந்துஜா, ஆனந்த் ராஜ், யோகி பாபு, கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், பிகில் படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. ஏற்கெனவே 2019 தீபாவளிக்கு பிகில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தீபாவளிக்கு முன்பு வார விடுமுறை வரவுள்ளதால் அக்.,24 அல்லது 25ம் தேதி பிகில் படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
தற்போது, விஜய்யின் பிகில் படம் அக்டோபர் 27 தீபாவளி அன்றே வெளியாகும் என்ற உறுதியான தகவல் வெளியானதால், விஜய் ரசிகர்கள் சரவெடி தீபாவளியாக கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து #BigilDiwali என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.








