சினிமா

ரஜினியின் ‘தர்பார்’ பட புதிய போஸ்டர் வெளியீடு : ரசிகர்கள் உற்சாகம்!

‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரஜினியின் ‘தர்பார்’ பட புதிய போஸ்டர் வெளியீடு : ரசிகர்கள் உற்சாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘தர்பார்’. இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக ரஜினியின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. இப்படத்தில், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ள தர்பார் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மும்பையில் உருவாகி வரும் தர்பார் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்து வருகிறது.

ரஜினியின் ‘தர்பார்’ பட புதிய போஸ்டர் வெளியீடு : ரசிகர்கள் உற்சாகம்!

ஏற்கெனவே தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் வெளியிடப்பட்டது. அதன் பிறகு இணையத்தில் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் கசிந்ததால் படக்குழுவே புதிதாக இரண்டு போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை போஸ்டர் உருவாக்க அறிவுறுத்தியது.

இந்த நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தர்பார் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் அறிவித்தது.

ரஜினியின் ‘தர்பார்’ பட புதிய போஸ்டர் வெளியீடு : ரசிகர்கள் உற்சாகம்!

அதன்படி, இன்று மாலை சரியாக 6 மணிக்கு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை தற்போது ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக தர்பார் செகண்ட் லுக் குறித்து அறிவித்ததும் ரஜினி ரசிகர்கள் #DarbarSecondLook என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். தற்போது அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

மேலும், தர்பார் படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்க இருப்பதாகவும், இதற்காக ஏற்கெனவே ரஜினியிடம் முருகதாஸ் கதை ஒன்று கூறியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

banner

Related Stories

Related Stories