சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் எப்போது? - படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தேதி முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் எப்போது? - படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம், சரித்திர நாவலான கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை இயக்கவுள்ளார். ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

நடிகர்கள் குறித்து எந்த ஒரு விவரத்தையும் அதிகாரபூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை. இருந்தாலும், இந்த படத்துக்காக 12 பாடல்களை எழுத உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சங்கக்கால இலக்கியங்களில் உள்ள வார்த்தைகளை இக்கால மக்களுக்கு ஏற்றார் போல் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் எப்போது? - படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

மேலும், மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மானே பொன்னியின் செல்வன் படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு, தோட்டா தரணி கலை இயக்கமும் செய்யவுள்ளார்.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவதற்கான பணிகளை மணிரத்னம் மேற்கொண்டு வருவதாகவும், அன்றைய தினமே படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் இதர பணியாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் எப்போது? - படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

இதற்கிடையில், பொன்னியின் செல்வன் சங்கக்கால கதையம்சம் கொண்டதால் பிரபல பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலியிடம் போர் காட்சிகள் மற்றும் வரலாற்று தொடர்புடைய காட்சிகளை உருவாக்குவது குறித்து மணிரத்னம் ஆலோசிக்க உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories