சினிமா

‘மேகமாய் வந்துபோகிறேன்...’ : 800 பாடல்களை எழுதிய கவிஞர் முத்துவிஜயன் மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி !

தமிழ்த் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் நேற்று மாலை காலமானார்.

‘மேகமாய் வந்துபோகிறேன்...’ : 800 பாடல்களை எழுதிய கவிஞர் முத்துவிஜயன் மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்த் திரையுலகில் 800-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் நேற்று மாலை காலமானார்.

‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகமாய் வந்துபோகிறேன்...’ உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் கவிஞர் முத்துவிஜயன.

பாடலாசிரியராக மட்டுமல்லாமல் வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவராகத் தன்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக்கொண்ட இவரது மறைவு ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

48 வயதான முத்துவிஜயனின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர். கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்துப் பெற்ற கவிஞர் முத்துவிஜயன் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

‘மேகமாய் வந்துபோகிறேன்...’ : 800 பாடல்களை எழுதிய கவிஞர் முத்துவிஜயன் மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி !

மஞ்சள்காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்து விஜயன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் நடைபெற்றது.

அண்ணாமலை, நா.முத்துக்குமார், முத்துவிஜயன் என இளம் பாடலாசிரியர்கள் அடுத்தடுத்து மறைவது திரையுலகுக்கு பெரும் இழப்பையும், தமிழ்த் திரைப்பாடல் ரசிகர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories