சினிமா

வெளியானது பிகில் படத்தின் “வெறித்தனம்” பாடல் - விஜய் குரலில் ஒரு தர லோக்கல் மோட்டிவேஷன் பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிகில் படத்திற்காக விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியானது பிகில் படத்தின் “வெறித்தனம்” பாடல் - விஜய் குரலில் ஒரு தர லோக்கல் மோட்டிவேஷன் பாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பிகில்’. தெறி, மெர்சல் வெற்றிக்குப் பிறகு, மூன்றாவது முறையாக இணைந்துள்ளது இந்தக் கூட்டணி. ‘மெர்சல்’ படத்தை அடுத்து பிகில் படத்திலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் விஜய் - அட்லி கூட்டணியுடன் இணைந்துள்ளார்.

இந்தப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. நயன்தாரா, விவேக், இந்துஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். அறிவித்திருந்தது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

'பிகில்' படத்தின் ''சிங்கப் பெண்ணே'' பாடல் கடந்த ஜூலை 23ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிங்கப் பெண்ணே பாடலைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இன்று மாலை வெளியாகும் என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

தனது படங்களில் தொடர்ந்து பாடி வரும் விஜய் கடைசியாக வெளியான இரண்டு படங்களில் படவில்லை என்பதாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியதில்லை என்பதால் பிகில் படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளதாக படக்குழு அறிவித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் 6 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்தப்பாடல் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்பாடலை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கண்டுகளித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories