சினிமா

எகிறும் எதிர்பார்ப்பு : வெளியாகிறது விஜய் ‘வெறித்தனம்’ - ட்ரெண்ட் ஆகும் பிகில் !

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிகில் படத்திற்காக விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இன்று வெளியாகும் என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு : வெளியாகிறது விஜய் ‘வெறித்தனம்’ - ட்ரெண்ட் ஆகும் பிகில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பிகில்’. தெறி, மெர்சல் வெற்றிக்குப் பிறகு, மூன்றாவது முறையாக இணைந்துள்ளது இந்தக் கூட்டணி. ‘மெர்சல்’ படத்தை அடுத்து பிகில் படத்திலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் விஜய் - அட்லி கூட்டணியுடன் இணைந்துள்ளார்.

இந்தப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. நயன்தாரா, விவேக், இந்துஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். அறிவித்திருந்தது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

'பிகில்' படத்தின் ''சிங்கப் பெண்ணே'' பாடல் கடந்த ஜூலை 23ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிங்கப் பெண்ணே பாடலைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இன்று வெளியாகும் என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ட்விட்டர் மற்றும் யூ-டியூப் ரசிகர்கள் தயாராக இருங்கள். நாளை அனைத்து சாதனையையும் வெறித்தனம் பாடல் முறியடிக்கும் என பதிவிட்டுள்ளார். முன்னதாக வெறித்தனம் பாடலின் இணையத்தில் வெளியானது. ஆனால், அப்பாடல் சோதனைக்காக பாடப்பட்ட டம்மி பாடல் என்பது பிறகு தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories