சினிமா

”வடசென்னைக்கு விருது இல்லையா” என்று கேட்டார்கள் : அதை விட எனக்கு பெரிய வருத்தம் இதுதான் - தனுஷ் ஆதங்கம் !

மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், பேரன்பு போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று வருத்தமாக இருந்தேன் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

”வடசென்னைக்கு விருது இல்லையா” என்று கேட்டார்கள் : அதை விட எனக்கு பெரிய வருத்தம் இதுதான் - தனுஷ் ஆதங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சமீபத்தில் 66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் ’பாரம்’ என்கிற ஒரு படத்துக்கு மட்டுமே தேசிய விருது கிடைத்துள்ளது. இது, தமிழ் சினிமா கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பரியேறும் பெருமாள், பேரன்பு, மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திட்டமிட்டு தமிழ் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுவதாக இயக்குநர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை, ராட்சசன், பேரன்பு போன்ற படங்களுக்குத் தேசிய விருது கிடைக்கவில்லை என்று வருத்தமாக இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

”வடசென்னைக்கு விருது இல்லையா” என்று கேட்டார்கள் : அதை விட எனக்கு பெரிய வருத்தம் இதுதான் - தனுஷ் ஆதங்கம் !

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் படம் ’அசுரன்’. ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் தனுஷ், வெற்றிமாறன் எப்போதும் நல்ல கதையைத்தான் கொடுப்பார். வடசென்னையைப் போல அசுரன் படத்திலும் என்னிடம் இருந்து நிறைய வேலை வாங்கி உள்ளார். எங்கள் கூட்டணியில் மற்றுமொரு வெற்றிப்படமாக இது இருக்கும். அதேபோல, 7 வருடங்களுக்கு பிறகு ஜீ.வி.பிரகாஷுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி.

சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவித்த போது வடசென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லையா என மக்கள் கேட்கும்பொழுது இதற்கு மேல் வேற என்ன வேணும் என தோன்றியது. நாங்கள் இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும் கலை இயக்குனர் ஜாக்கிக்கு விருது கிடைக்கவில்லை என வருத்தப்பட்டேன். அதேபோல்,`பரியேறும் பெருமாள்’ படத்துக்காக மாரி செல்வராஜுக்கு, `ராட்சசன்’ படத்துக்காக ராம் குமாருக்கும், `மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று தெரிந்து வருத்தமாக இருந்தேன்'' என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories