சினிமா

“ஜேம்ஸ்பாண்ட் - 007” ரசிகரா நீங்கள்? - அடுத்த ஆண்டு உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது !

ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

“ஜேம்ஸ்பாண்ட் - 007” ரசிகரா நீங்கள்? - அடுத்த ஆண்டு உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

ஜேம்ஸ்பாண்ட் - பிரிட்டனின் ரகசிய உளவாளி. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்திருந்த ஒரு பெயர் ‘ஜேம்ஸ் பாண்ட்’.

ஜேம்ஸ்பாண்ட் 007 என்ற பெயர் கிட்டத்தட்ட ஒரு மந்திரச் சொல்லாகவே மாறிப்போயிருக்கிறது. 007 என்பது ரகசிய குறிப்பெண். ஜேம்ஸ் பாண்டின் சாகசங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா? . நீரிலும், நிலத்திலும் செல்லும் கார்கள், கடலுக்கடியில் சாகசம், துப்பாக்கி குண்டுகளின் சத்தம் என ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பவர்கள் மனதில் ஒரு வித மகிழ்ச்சி குடிகொள்ளும்.

ஜேம்ஸ் பாண்டின் முதல் திரைப்படம் 1962-ல் வெளியான டாக்டர் நோ. கடந்த 2015-ல் ஜேம்ஸ்பாண்டின் 24 படமான ஸ்பெக்டர் வெளியானது. இதில் நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. 57 வருடங்கள் கடந்தும் உலக சினிமா ரசிகர்களுக்கு ஜேம்ஸ்பாண்ட் மீதான மோகம் தீரவில்லை.

இந்நிலையில் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஜேம்ஸ்பாண்டின் 25 வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் 007 - புதிய படத்தின் போஸ்டர்.
ஜேம்ஸ் பாண்ட் 007 - புதிய படத்தின் போஸ்டர்.

ஜேம்ஸ் பாண்டின் 25-வது படத்திற்கு 'நோ டைம் டூ டை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல்கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கிறார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜேம்ஸ்பாண்ட் - 007” ரசிகரா நீங்கள்? - அடுத்த ஆண்டு உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது !

இதுவரை, ஜேம்ஸ் பாண்ட் 007 - கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் அவர்கள் நடித்துள்ள படங்களின் பெயர் விவரம்:

1.Dr. No (1962-Sean Connery)

2.From Russia With Love (1963-Sean Connery)

3.Goldfinger (1964-Sean Connery)

4.Thunderball (1965-Sean Connery)

5.You Only Live Twice (1967-Sean Connery)

6.On Her Majesty's Secret Service (1969-George Lazenby)

7.Diamonds Are Forever (1971-Sean Connery)

8.Live and Let Die (1973-Roger Moore)

9.The Man with the Golden Gun (1974-Roger Moore)

10.The Spy Who Loved Me (1977-Roger Moore)

11.Moonraker (1979-Roger Moore)

12.For Your Eyes Only (1981-Roger Moore)

13.Octopussy (1983-Roger Moore)

14.A View to a Kill (1985-Roger Moore)

15.The Living Daylights (1987-Timothy Dalton)

16.Licence to Kill (1989-Timothy Dalton)

17.GoldenEye (1995-Pierce Brosnan)

18.Tomorrow Never Dies (1997-Pierce Brosnan)

19.The World is Not Enough (1999-Pierce Brosnan)

20.Die Another Day (2002-Pierce Brosnan)

21.Casino Royale (2006-Daniel Craig)

22.Quantum of Solace (2008-Daniel Craig)

23.Skyfall (November 2012-Daniel Craig)

24. spectre (november 2015 - Daniel craig)

banner

Related Stories

Related Stories