சினிமா

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் மீட்பு!

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலையாள திரைப்பட நடிகை மஞ்சு வாரியர் உட்பட அவர் நடித்துவரும் ‘கயட்டம்’ என்ற மலையாள படக்குழுவினர் சிக்கி உள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் மீட்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மலையாளப்பட உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் அசுரன் படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘கயட்டம்’ என்ற மலையாளப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகை மஞ்சு வாரியர், இயக்குனர் சனல்குமார் சசிதரன் உள்ளிட்ட படக்குழுவினர் இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ளனர். மணாலியிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள சத்ரு என்ற இடந்தில் கடந்த இரண்டு வாரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் நடிகை மஞ்சுவாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் சிக்கியுள்ளனர். இதுகுறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது சகோதரர் மது வாரியரிடம் சேட்டிலைட் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது தானும் படப்பிடிப்புக் குழுவினரும் நிலச்சரிவில் சிக்கியிருப்பதைத் தெரிவித்துள்ளார். அவர்களிடம் உணவுப்பொருட்களும் தீர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மஞ்சு வாரியரின் சகோதரர் மது வாரியர், மத்திய அமைச்சர் முரளிதரனிடம் உதவி கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து படக்குழுவினரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் படக்குழுவினர் பத்திரமாக உள்ளதாகவும் மஞ்சு வாரியர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories