சினிமா

சிரஞ்சீவியின் புதிய அவதாரம் - ‘சைரா நரசிம்ம ரெட்டி’ : படத்தில் இத்தனை பிரபலங்களா ? அசத்தும் ’டீசர்’ !

சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து காணாமல் போன உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டீசர் வெளியானது.

சிரஞ்சீவியின் புதிய அவதாரம் - ‘சைரா நரசிம்ம ரெட்டி’ : படத்தில் இத்தனை பிரபலங்களா ? அசத்தும் ’டீசர்’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆந்திராவின் ராயலசீமாவைச் சேர்ந்த உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி. இவரது வாழ்க்கை வரலாறுதான் தற்போது சைரா நரசிம்மா ரெட்டி என்ற படமாக உருவாகியுள்ளது.

சைரா நரசிம்மா ரெட்டியாக ஆந்திர சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். இது இவருக்கு 151வது படம். பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, ஜெகபதி பாபு, சுதீப் ஆகிய முன்னனி நட்சத்திரங்கள் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழியில் சைரா நரசிம்மா ரெட்டி படம் வெளிவர உள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் ஃபர்ஸ் லுக் போஸ்டரை அவர்களது பிறந்த நாளன்று வெளியிட்டு சிறப்பித்தது படக்குழு.

சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு நடிகருமான ராம்சரண் தேஜா தயாரித்துள்ள இந்த படத்தை. பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை அமைத்துள்ளார். முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த ஆக.,14 அன்று யூடியூப்-ல் வெளியிடப்பட்டது. இது 5 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் இன்று சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. யூடியூப்-ல் வெளியிட்ட சில நிமிடத்திலேயே ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories