சினிமா

‘பிகில்’ தங்க மோதிரம் : 400 பேரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் விஜய் - வைரல் புகைப்படங்கள் !

நடிகர் விஜய் ’பிகில்’ படத்தில் தன்னுடன் பணியாற்றிய 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தங்க மோதிரத்தை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

‘பிகில்’ தங்க மோதிரம் : 400 பேரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் விஜய் - வைரல் புகைப்படங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பிகில்’. தெறி, மெர்சல் வெற்றிக்குப் பிறகு, மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் ‘மெர்சல்’ படத்தை அடுத்து பிகில் படத்திலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார்.

நயன்தாரா, விவேக், இந்துஜா என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். அறிவித்திருந்தது.

சமீபத்தில் வெளியான ’சிங்கப்பெண்ணே..’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 95 சதவிகித பணிகள் முடிந்த நிலையில் தன்னுடன் பணியாற்றிய நடிக- நடிகைகள், கலைஞர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் விஜய் தங்க மோதிரத்தை பரிசு அளித்துள்ளார்.

அந்த பரிசை பெற்றுக் கொண்ட நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் தங்க மோதிரத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த மோதிரத்தில் ஆங்கிலத்தில் Bigil என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், “இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் தொடர் அறிவிப்புகளை வெளியிடாததற்கு மன்னியுங்கள். நிச்சயம் ‘பிகில்’ உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இந்த படத்திற்கு 400க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றியுள்ளனர்.

அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் விஜய், மோதிரம் வழங்கியுள்ளார். அவர் மனசும் தங்கம் போன்றது, அவர் பெஸ்ட்”. என்று கூறியுள்ளார். தற்போது விஜய் வழங்கிய தங்க மோதிரத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிகில் திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளதால், படத்தில் கால்பந்து வீரர், வீராங்கனைகளாக நடித்தவர்களுக்கு நடிகர் விஜய் தன் கையெழுத்தையிட்டு, கால்பந்துகளையும் பரிசாக வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories