சினிமா

சினி அப்டேட்ஸ் 5 : அஜித்தின் அடுத்த படம்... ட்ரெண்டிங்கில் துல்கர் சல்மான்!

அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்கள் குறித்த தகவல்களோடு லேட்டஸ்ட் சினிமா அப்டேட்ஸ்!

சினி அப்டேட்ஸ் 5 : அஜித்தின் அடுத்த படம்... ட்ரெண்டிங்கில் துல்கர் சல்மான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. அஜித்தின் 60வது படம்!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கும் இப்படம், பாலிவுட்டில் வெளியான பிங்க் பட ரீமேக். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

சினி அப்டேட்ஸ் 5 : அஜித்தின் அடுத்த படம்... ட்ரெண்டிங்கில் துல்கர் சல்மான்!

இப்படம் ஆகஸ்ட் 8 வெளியாக இருக்கும் வேளையில், அதே மாதம் அஜித் 60 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க இருக்கிறது. மீண்டும் போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் படம் நடிக்க இருக்கிறார். அஜித் 60வது படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

2. ஆயுத பூஜையை குறிவைக்கும் சிவகார்த்திகேயன் படம்

குழந்தைகளைக் கவரும் நடிகராக, இளைஞர்களின் விருப்ப நடிகராக வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். இறுதியாக, சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல் படம் வெளியானது. தற்போது சிவகார்த்திகேயன், இன்று நேற்று நாளை ரவிக்குமார், இரும்புத்திரை பி.எஸ்.மித்ரன் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோரின் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவா நடித்துவரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சினி அப்டேட்ஸ் 5 : அஜித்தின் அடுத்த படம்... ட்ரெண்டிங்கில் துல்கர் சல்மான்!

சிவாவுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய ரோலில் பாரதிராஜா, ஐஷ்வர்யா ராஜேஷ், நட்டி, ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, சூரி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் படத்துக்கு இசை டி.இமான். இந்தப் படத்தை ஆயுதபூஜை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3. ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த துல்கர்!

‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்தார். இவ்விரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், துல்கருக்கு தமிழில் வெளியாக இருக்கும் அடுத்த படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் துல்கருக்கு ஜோடியாக ரீதுவர்மா நடித்துள்ளார்.

சினி அப்டேட்ஸ் 5 : அஜித்தின் அடுத்த படம்... ட்ரெண்டிங்கில் துல்கர் சல்மான்!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்துக்கு மசாலா கஃபே இசைக்குழு இசையமைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. படத்தில் மற்றுமொரு சிறப்பு, இயக்குநர் கெளதம் மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுவும் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆக்‌ஷன் கலந்த காதல் பாடமான இது, ஆகஸ்டில் வெளியாக இருப்பது கூடுதல் தகவல்.

4. மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘கொலையுதிர் காலம்’

கடந்த மார்ச் 28ஆம் தேதி நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் ஐரா. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றது.இந்நிலையில், நயனுக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கொலையுதிர்காலம்’. சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.

சினி அப்டேட்ஸ் 5 : அஜித்தின் அடுத்த படம்... ட்ரெண்டிங்கில் துல்கர் சல்மான்!

இந்த வருட துவக்கத்திலேயே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் சில பிரச்னைகளால் ரிலீஸாகாமல் தள்ளிப் போகிறது. கடந்த வாரம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் தள்ளிப்போய், இந்த ஆகஸ்ட் 1 ரிலீஸ் என சொல்லப்பட்டது. தற்போது ரிலீஸை ஆகஸ்ட் 2க்கு தள்ளி வைத்துள்ளது படக்குழு. இப்படி பல முறை தள்ளிப்போய் ரிலீஸூக்கு போராடி வருகிறது நயன்தாராவின் கொலையுதிர்காலம் திரைப்படம்.

5. பாலிவுட்டில் ரீமேக்காகும் கத்தி திரைப்படம்

விவசாய பிரச்னையை மையமாக வைத்து 2014ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் கத்தி. சமந்தா நாயகியாக நடித்திருந்த இப்படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்தப் படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினி அப்டேட்ஸ் 5 : அஜித்தின் அடுத்த படம்... ட்ரெண்டிங்கில் துல்கர் சல்மான்!

விஜய் கேரக்டரில் நடிக்க அக்‌ஷய் குமாரிடம் பேச்சுவர்த்தை நடந்துவருகிறது. மேலும் இப்படத்தை ஜகன் ஷக்தி என்பவர் இயக்குகிறார். இவர் தற்போது இயக்கிவரும் படம் மிஷன் மங்கள். இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருப்பதால், இந்த கூட்டணி கத்தி ரீமேக்கில் இணைய அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories