சினிமா

தனுஷ் D39 படத்தின் தலைப்பு ‘பட்டாஸ்’ - வெளியிட்ட படக்குழு : தீபாவளிக்கு விஜய் ‘பிகில்’ படத்தோடு ரிலீஸ் ?

துரை.செந்தில்குமார் இயக்கதில் நடிகர் தனுஷ் நடித்துவரும் படத்திற்கு ‘பட்டாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தனுஷ் D39 படத்தின் தலைப்பு ‘பட்டாஸ்’ - வெளியிட்ட படக்குழு : தீபாவளிக்கு விஜய் ‘பிகில்’ படத்தோடு ரிலீஸ் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் தனுஷ் தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். துரை. செந்தில்குமார் ஏற்கனவே கொடி,எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

நடிகை சினேகா புதுப்பேட்டை படத்துக்கு பிறகு தனுஷுடன் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றது. இந்த படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை எனவே இப்படத்தை D39 என்று அழைத்துவந்தனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாள் பரிசாக D39 படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

மேலும், இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் #PattasFirstLook என்ற ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம் நடிகர் விஜய் நடிக்கும் ‘பிகில்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories