சினிமா

இரண்டு ஆண்டுகளில் 10 படங்கள் - பிரமிப்பில் ஆழ்த்த வரும் மார்வெல் சூப்பர் ஹீரோக்கள்!

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக அடுத்த இரன்டு ஆண்டுகளுக்கு என்னென்ன படங்கள், எப்போது வெளியாகும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ்.

இரண்டு ஆண்டுகளில் 10 படங்கள் - பிரமிப்பில் ஆழ்த்த வரும் மார்வெல் சூப்பர் ஹீரோக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காமிக்ஸ் கதைகளை மையமாக வைத்து சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கி வருகிறது ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ். மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் வெளியாகும் படங்கள் நாடுகள் தாண்டி பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் வசூல், அவதார் திரைப்படத்தின் வசூலை முந்தி உலக சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு என்னென்ன படங்கள், எப்போது வெளியாகும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ். சமீபத்தில் நடந்த ‘காமிக்-கான்’ (COMIC-CON) நிகழ்ச்சியில் மார்வெல்ஸ் ஸ்டுடியோவின் அடுத்தடுத்த தயாரிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளில் 10 படங்கள் - பிரமிப்பில் ஆழ்த்த வரும் மார்வெல் சூப்பர் ஹீரோக்கள்!

அதன்படி, பிளாக் விடோ (Black Widow), ஃபால்கான்(Falcon and the Winter Soldier), தி எட்டர்னல்ஸ்(The Eternals ), ஷாங் சி அண்ட் லெஜெண்ட் ஆப் டென் ரிங்ஸ்(Shang-Chi and the Legend of the Ten Rings), வாண்டாவிசன்(WandaVision) , டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (Doctor Strange and the Multiverse of Madness), லோகி(Loki), வாட் இஃப்(What If...?), ஹாக்ஐ (Hawkeye),தோர் (Thor: Love and Thunder) ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

இரண்டு ஆண்டுகளில் 10 படங்கள் - பிரமிப்பில் ஆழ்த்த வரும் மார்வெல் சூப்பர் ஹீரோக்கள்!

அதேபோல , சீரிஸ் வரிசையில் ப்ளாக் பாந்தர், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி, மற்றும் கேப்டன் மார்வெல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. மார்வெல்ஸ் ஸ்டுடியோவின் அடுத்தடுத்து வரும் தயாரிப்புகள் குறித்த அப்டேட்ஸ் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories