சினிமா

சர்வதேச அங்கீகாரம் பெறும் உதயநிதி ஸ்டாலின் : விருதை வென்ற ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் !

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் கொல்கத்தா கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அங்கீகாரம் பெறும் உதயநிதி ஸ்டாலின் : விருதை வென்ற ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘கண்ணே.. கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

விவசாயியாகவும், மக்களுக்கு உதவி செய்யும் சமூக ஆர்வலராகவும் நடித்த உதயநிதியின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில், இந்த திரைப்படம் கொல்கத்தா கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இந்த திரைப்படம் தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவில் விருது வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

banner

Related Stories

Related Stories