சினிமா

விஜய் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட் : “பிகில்” படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் தகவல்

விஜய் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட் : “பிகில்” படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட் : “பிகில்” படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் தகவல்

பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 21ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் 3 போஸ்டர்கள் வெளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்நிலையில் பிகில் படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'பிகில்' படத்தில் நடிகர் விஜய் பாடல் ஒன்றினை பாடியுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த ஆல்பத்தில் பாடுவதற்கான எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்க்கு, அவரது ரசிகர்கள் அனைவரிடமிருந்தும் ஒரு பெரிய நன்றி. என்னை நம்புங்கள் பாடல் வெறித்தனமாக உள்ளது. இதை நிகழ்த்தியதற்காக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் அட்லீ மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

விஜய் கடைசியாக 2017 ம் ஆண்டில் வெளிவந்த “பைரவா” படத்தில் சந்தோஷ் நாரயணன் இசையில் “பாப்பா பாப்பா” என்ற பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடும் வகையில், “வெறித்தனம்” என்ற ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories