சினிமா

இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு : விரைவில் மற்ற பதவிகளுக்கான தேர்தல்!

இயக்குநர் பாரதிராஜா , இயக்குநர்கள் சங்கத்துக்கான தலைவராக போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு : விரைவில் மற்ற பதவிகளுக்கான தேர்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக விக்ரமனும், பொதுசெயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.

இந்நிலையில், இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்போதைய தலைவரான விக்ரமன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருப்பதாலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.

இதையடுத்து, இயக்குநர் பாரதிராஜா , இயக்குநர்கள் சங்கத்துக்கான தலைவராக போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்குநர் சங்கத்தின் புதிய தலைவராக பாரதிராஜா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

வரும் ஜூன் 23-ம் தேதி தென்ந்திந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு இயக்குநர்கள் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories