சினிமா

சனாதனத்தை எதிர்க்க வருகிறான் ‘ஜிப்ஸி’ ! (வீடியோ)

”ஒரு குரல்ல அடக்கனும் நினச்சீங்கனா ஓராயிரம் குரல் வெடிக்கும்” இசை, காதல், அரசியல் பற்றி பேசும் ஜிப்ஸி படத்தின் ட்ரைலர் அதிரடி காட்டுகிறது.

சனாதனத்தை எதிர்க்க வருகிறான் ‘ஜிப்ஸி’ ! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சாதி, மத அரசியலுக்கு எதிராகவும், இசை காதல் என அரசியல் சார்ந்து பேசுகிறது இயக்குனர் ராஜூ முருகனின் ஜிப்ஸி படத்தின் ட்ரைலர்.

'ஜிப்ஸி' படத்தில் ஹீரோவாக நடிகர் ஜீவாவும் அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளனர். ஜிப்ஸி என்கிற பெயரில் தனது பயண அனுபவங்கள் குறித்து ராஜூ முருகன் ‘விகடனில்’ தொடர்ந்து எழுதி வந்தார். அது பின்னர் புத்தகமாவும் வெளி வந்தது. இந்த படத்தை அம்பேத் குமார் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சனாதனத்தை எதிர்க்க வருகிறான் ‘ஜிப்ஸி’ ! (வீடியோ)

சமகாலத்தில் சாதி, மத அரசியலுக்கு எதிராக இப்படம் வலுவாக பேசுவதாக ட்ரைலர் அமைந்துள்ளது. ட்ரெய்லரில் ஒரு முக்கிய கருத்தாக ”ஒரு குரல்ல அடக்கனும் நினச்சீங்கனா ஓராயிரம் குரல் வெடிக்கும்” என்று வருகிறது. ”இங்க எல்லாமே அரசியல் தான்”, “அப்பாவி மக்களோட மொழி, இனம், சாதி, மதம், நிலம், பசி, வலி, காதல் எலாத்தையும் அரசியல் ஆக்குறவனும், வியாபாரமாக்குறவனும் தான் நம்முடைய எதிரி” போன்ற வசனங்கள் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது.

சனாதனத்தை எதிர்க்க வருகிறான் ‘ஜிப்ஸி’ ! (வீடியோ)

இந்தப்படம் ட்ரைலர் முடிவில் இசை, காதல், அரசியல் என முழு கலவையான படமாக இருக்கும் என்று இயக்குனர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories