சினிமா

ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம் : தேர்தல் ஆணையம் பதில் மனு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குசாவடியில் மறு தேர்தல் நடத்த கோரி வழக்கு. வரும் மே17ம் தேதி பதில்மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ராஜேஷ்வரி பிரியா தொடர்ந்துள்ள வழக்கில், விருகம்பாக்கத்தில் 109வது வார்டுக்கு உட்பட்ட காவேரி பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை வாக்களிக்க அனுமதித்தது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் சிவகார்த்திகேயனும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கத்தில் வாக்களித்துள்ளதையும் குறிபிட்டுள்ளார்.

பொது மக்கள் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க அனுமதிக்காத தேர்தல் அதிகாரிகள் பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கும், அவர்களுடன் வருபவர்களுக்கும் வாக்களிக்க அனுமதியளிப்பது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்றும், தேர்தல் அதிகாரி பாரபட்சத்துடன் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்ரீகாந்த் வாக்களித்த அந்த வாக்கு சாவடிக்கு மறுதேர்தல் நடத்த ஆணையத்திடம் புகார் அளித்தும், அது நிராகரிக்கப்பட்டுள்ளதால், காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் வழக்குதான் தொடர முடியுமெனவும், மறு வாக்குப்பதிவு நடத்த முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை பதிவு நீதிபதிகள், ஆணையத்தின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 17ஆம் தேதி ஒத்திவைத்ததனர். வாக்குசாவடியில் மறு தேர்தல் நடத்த கோரி வழக்கு. வரும் மே 17ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

banner

Related Stories

Related Stories