சினிமா

டி. ஆர்.பி ரேட்டிங்கில் அஜித் ‘விஸ்வாசம்’ படம் புதிய சாதனை !

அஜித்- சிவா கூட்டணியில் உருவாகி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது விஸ்வாசம் படம். இப்போது புது சாதனையையும் படைத்துள்ளது.

டி. ஆர்.பி ரேட்டிங்கில் அஜித் ‘விஸ்வாசம்’ படம் புதிய சாதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுத்தை சிவா மற்றும் நடிகர் அஜித்தின் கூட்டணியில் உருவாகி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். இதில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் தம்பி ராமையா, விவேக், கோவை சரளா, ரோபோ சங்கர், யோகி பாபு என திரளான நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர்.

குடும்ப பாங்கான கதையை கருவாக வைத்து, தந்தை மகள் பாசப் பிணைப்பை உணர்த்தும் வகையில் விஸ்வாசம் படம் அமைந்திருந்தது. விஸ்வாசம் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

டி. ஆர்.பி ரேட்டிங்கில் அஜித் ‘விஸ்வாசம்’ படம் புதிய சாதனை !

அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் சாதனையை படைத்து வெற்றிப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும், குடும்பத்தோடு சென்று ரசிக்கும் திரைப்படமாகவும் இருந்தது.

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பெற்ற சன் பிக்சர்ஸ், நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதியன்று விஸ்வாசம் திரைப்படத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.

திரையரங்கில் பார்த்தது மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்பட்ட போது அனைத்து மக்களும் விஸ்வாசம் படத்தை பார்த்தனர். இதனால், இதுவரை இல்லாத அளவிற்கு 18.1 மில்லியன் பார்வையர்களை பெற்று டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது.

முன்னதாக, பல்வேறு சமயங்களில் வெளியான பாகுபலி, பிச்சைக்காரன், சர்கார் படங்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை பின்னுக்குத் தள்ளியுள்ளது விஸ்வாசம் படம். இதனால் அஜித் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories