சினிமா

மாஸ் ஸ்கிரிப்டுடன் பசங்க பட இயக்குநர்... அடுத்த 2 ஆண்டுகளுக்கு சூர்யாவின் ராஜ்ஜியம்...

என்.ஜி.கே., காப்பான் ரிலீஸ், சூரரைப் போற்று என அடுத்தடுத்து பல அறிவிப்புகளை வெளியிட்டு படு பிசியில் உலா வருகிறார் நடிகர் சூர்யா.

மாஸ் ஸ்கிரிப்டுடன் பசங்க பட இயக்குநர்... அடுத்த 2 ஆண்டுகளுக்கு  சூர்யாவின் ராஜ்ஜியம்...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘என்.ஜி.கே.’ படம் இந்த (மே) மாத இறுதியிலும், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காப்பான்’ படம் ஆகஸ்ட் மாத இறுதியிலும் வெளிவர இருக்கிறது.

இந்த இரண்டு படங்களிலும் நடிப்பு, டப்பிங் என அனைத்து பணிகளையும் சூர்யா முடித்துவிட்ட நிலையில், இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒப்பந்தமாகியிருக்க சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

மேலும் சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு மற்றும் இதர விவரங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பசங்க, மெரினா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில், “நடிகர் சூர்யாவுடன் எப்போது மீண்டும் இணைந்து படம் எடுக்க போறீங்கனு” ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பாண்டிராஜ், “சூர்யாவுக்காக பக்கா மாஸ் கமர்சியல் & வில்லேஜ் ஸ்டைல் கதை ரெடியாகிட்டு வருது” என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜின் ட்விட்டர் பதில்
இயக்குநர் பாண்டிராஜின் ட்விட்டர் பதில்

என்.ஜி.கே., காப்பான் ரிலீஸ், சூரரைப் போற்று, சிறுத்தை சிவா கூட்டணி என தொடர்ந்து அறிவிப்பு வெளிவந்த நிலையில், தற்போது, சூர்யாவுக்கான பாண்டிராஜின் கதையும் தயாராகியிருப்பது சூர்யாவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமைந்திருக்கிறது.

முன்னதாக, இயக்குநர் பாண்டிராஜுடன் இணைந்து பசங்க 2 (ஹைக்கூ) படத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories