சினிமா

தங்க மங்கை கோமதிக்கு ரூ.5 லட்சம் பரிசளித்த விஜய்சேதுபதி!

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நாடு முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.

தங்க மங்கை கோமதிக்கு ரூ.5 லட்சம் பரிசளித்த விஜய்சேதுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து.

ஆசிய போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்ததால் நாடு முழுவதும் உள்ள மக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் எவ்வித உதவியும், பாராட்டும், பரிசும் வழங்காத நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்க மங்கையின் சாதனையை பாராட்டி அவருக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளித்திருக்கிறார். மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி, ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துவை தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது சாதனையை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.

கோமதி மாரிமுத்துவுக்கு 5 லட்சத்துகான காசோலையை வழங்கிய விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தினர்.
கோமதி மாரிமுத்துவுக்கு 5 லட்சத்துகான காசோலையை வழங்கிய விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தினர்.
banner

Related Stories

Related Stories