தி.மு.க

தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 10 லட்சம் நிதி - தி.மு.க அறிவிப்பு!

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தி.மு.க சார்பில் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 10 லட்சம் நிதி - தி.மு.க அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்று வந்த ஆசிய தடகளப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

அதேபோல், ஆடவர் ஓட்டப்பந்தயத்தில் 4x400 மீ தொடர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசியப் போட்டியில் சாதனை புரிந்த இருவரும் நேற்று தாயகம் திரும்பினர்.

இந்நிலையில், தடகள விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரும் வீராங்கனையும் நிகழ்த்தியுள்ள சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சமும், ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சமும் நிதியாக வழங்கப்படும் என திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்திருக்கிறது.

மேலும், இந்தியாவுக்கான இவர்களது சாதனைகள் மேன்மேலும் தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டு தி.மு.க சார்பில் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுள்ளது.

banner

Related Stories

Related Stories