சினிமா

ரிலீஸ் ஆனது ‘என்ஜிகே’ ட்ரெய்லர்! #NGKTrailer

சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு வெளியாகியுள்ளது.

Suriya
Suriya
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'என்ஜிகே'. இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘என்ஜிகே’ படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் சூர்யா, செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டனர்.

இப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடித்துள்ளார். மேலும், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடிப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மே மாத இறுதியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories