சினிமா

யுவன், செல்வராகவன் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் - என்.ஜி.கே. டிரெய்லர் ஸ்பெஷல்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதற்கு படத்தின் தயாரிப்பு குழு சிறப்பு ஏற்பாடு ஒன்றை ரசிகர்களுக்காக செய்துள்ளது.

யுவன், செல்வராகவன் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் - என்.ஜி.கே. டிரெய்லர் ஸ்பெஷல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்) இதில் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள என்.ஜி.கே. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வராகவன் - சூர்யா - யுவன் கூட்டணியின் உருவாகியுள்ள என்.ஜி.கே. படத்திற்கான ஒவ்வொரு அப்டேட்டிற்கும் ரசிகர்கள் மத்திய அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

யுவன், செல்வராகவன் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் - என்.ஜி.கே. டிரெய்லர் ஸ்பெஷல்

அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சூர்யாவின் என்.ஜி.கே. பட டீசர் மற்றும் சிங்கில் (முதல் பாடல்) கடந்த ஏப்.,12 அன்று வெளியானது. இந்நிலையில் இன்று (ஏப்.,29) மாலை 7.30 மணிக்கு படத்தின் டிரெய்லரும், பாடல்களும் ரிலீசாக உள்ளது என படக்குழு அறிவித்திருக்கிறது.

யுவன், செல்வராகவன் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் - என்.ஜி.கே. டிரெய்லர் ஸ்பெஷல்

இதற்காக இயக்குநர் செல்வராகவனும், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து ட்விட்டரில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாட தயாரிப்பு குழு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும் யுவன் மற்றும் செல்வாவிடம் கேள்விகளை கேட்க #ASKNGKTEAM என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

banner

Related Stories

Related Stories