சினிமா

காஞ்சனா இந்தி ரீ-மேக்கின் படப்பிடிப்பு ஆரம்பம்!  

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கை பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை வைத்து ராகவா லாரன்ஸ் இன்று தொடங்கி உள்ளார். 

காஞ்சனா இந்தி ரீ-மேக்கின் படப்பிடிப்பு ஆரம்பம்!  
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதில் சரத்குமார் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஹீரோயினாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்க உள்ளார், அவருடன் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதில் சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.இதை ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரித்துள்ளார். இந்த படத்திற்கு ‘லக்‌ஷ்மி பாம்ப்’ என பெயரிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories