சினிமா

பிரபுதேவாவின் ‘தேவி 2’ படம் ரீலீஸ் தேதி அறிவிப்பு ! 

‘தேவி 2’ படம் வரும் மே மாதம் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிரபுதேவாவின் ‘தேவி 2’ படம் ரீலீஸ் தேதி அறிவிப்பு ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, சோனு சூட், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் 'தேவி'. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தேவி 2' உருவாகி வந்தது. 'தேவி 2' படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த படம் வரும் மே மாதம் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதே நாளில் தான் சூர்யாவின் 'என்.ஜி.கே' படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories