சினிமா

‘காஞ்சனா’-வில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

‘காஞ்சனா’ திகில் படத்தின் மூன்றாவது பாகம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், காஞ்சனா படத்தின் முதல் பாகம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

Laaxmi Bomb
Laaxmi Bomb
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘காஞ்சனா’ திகில் படத்தின் மூன்றாவது பாகம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், காஞ்சனா படத்தின் முதல் பாகம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘காஞ்சனா’ படத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு ‘லக்‌ஷ்மி பாம்’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழில் நடிகர் சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பது பாலிவுட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Amitabh Bachchan
Amitabh Bachchan

அமிதாப் பச்சன் ஏற்கெனவே, 1981-ல் வெளியான ‘லாவரிஸ்’ படத்தில் பல்வேறு பெண் வேடங்களை ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories