சினிமா

சென்சுரி அடித்த பேட்ட, விஸ்வாசம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படம் வெற்றியடைந்ததை அடுத்து கொண்டாட்டத்தில் திளைத்த படக்குழு

சென்சுரி அடித்த பேட்ட, விஸ்வாசம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019ம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வசூல் மழை பொழிந்தது.

பேட்ட படத்தின் 100 வது நாளையொட்டி, #100daysofMaranamassPetta என்ற ஹேஷ்டேக்கும், விஸ்வாசம் படத்துக்காக #ViswasamGlorious100Days என்ற ஹேஷ்டேக்குகள் சென்னை அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி, ரசிகர்களும் பல பதிவுகளை இட்டு கொண்டாட்டத்தில் நெகிழ்ந்தனர்.

இதனையடுத்து, பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

அதேபோல், விஸ்வாசம் படத்தில் தமிழ்நாடு விநியோக நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு ரசிகர்களே காரணம். மிகப்பெரிய அளவில் ஒன்றிணைந்து கொண்டாடுவோம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories