உலகம்

2026-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு.. எந்தெந்த துறையில் யாருக்கு பரிசு! : முழு விவரம் அறிக!

உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், தங்களது துறையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்களிப்பை வழங்குபவர்களுக்கும் நோபல் பரிசுகளை அறிவிக்கப்படுவது வழக்கம். இது உலக நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி, சுவீடிஷ் அகாடமி இலக்கியத்திற்கான நோபல் பரிசையும், ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகளையும் அறிவிக்கிறது.

கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசையும், நார்வேஜியன் நோபல் குழு அமைதிக்கான (Peace) நோபல் பரிசை அறிவிக்கிறது.

இந்தப் பரிசை பெறுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை.

2026-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகள்களை ஆராயும் ஐஸ்கியூப் ஆய்வகத்தின் வளர்ச்சிக்கும், விண்வெளியிலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்துருவப் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கியூப் ஆய்வகம், நியூட்ரினோக்களைப் பதிவுசெய்து அவற்றின் தோற்றம் மற்றும் பண்புகளை ஆராய உதவுகிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசு ஹென்றி பி. காகன் மற்றும் கென்சோ சோஆய் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமச்சீரற்ற வேதித்தொகுப்பு மற்றும் தன்னூக்க வினையூக்கம் தொடர்பான ஆய்வுகள் இவர்களின் சாதனைகளில் இடம்பெற்றுள்ளன. மூலக்கூறுகளின் குறிப்பிட்ட வடிவங்களைத் தேர்ந்தெடுத்து உருவாக்கும் வேதிவினைகள், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய ஆய்வுகள் வேதியியல் வினைகளின் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கும் புதிய பயன்பாடுகளை ஆராய்வதற்கும் உதவுகின்றன.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான ஆன் கார்சனுக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டைய இலக்கிய மரபுகளையும் நவீன எழுத்து வடிவங்களையும் இணைக்கும் அவரது படைப்புகள் கவிதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியவைக்காக வழங்கப்பட உள்ளது.

மொழி, பண்பாடு மற்றும் மனித அனுபவம் தொடர்பான கருத்துகளைப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துவது அவரது படைப்புகளின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான இந்திய வம்சாவளி தமிழர் நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் பெரும்பான்மையாக அவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகப் பணியாற்றிய அவர், சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களிலும் தனது சிறப்பான ஈடுபாட்டை வழங்கியுள்ளார்.

2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் நினைவுப் பரிசின் வெற்றியாளர் குறித்த அறிவிப்பு அக்டோபர் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: அமைதிக்கான நோபல் பரிசு.. நவநீதம் பிள்ளைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!